Designed by Iniyas LTD
நாட்டில் மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுஸ்டிப்பதற்கு தடை…
நாட்டில் மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுஸ்டிப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லாட்சி அரசு ஆரம்பிக்கப்பட்டு கடந்த சில வருடங்கள் மாவீரர் நாள் நிகழ்வுகள் வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்கப்பட்டு வந்தன.
இதற்கு அரச தரப்பில் இருந்து கண்காணிப்பு இருந்த போதும் தடைகள் ஏதும் விதிக்கப்படவில்லை.
இம்முறை நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக புதிய அரச தரப்பினர் மாவீரர் தின நிகழ்வுகள் அனுஸ்டிப்பதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.