Designed by Iniyas LTD
நாட்டு நடப்புகள் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாரா ? – ராமதாஸ்
தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் யாருக்கும் அன்புமணி ராமதாஸிடம் விவாதம் நடத்தும் அளவுக்கு துணிச்சல் இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். 
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பாமக வரைவு தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், 8 மாதங்களுக்கு முன்பே பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், நாட்டு நடப்புகள் குறித்து ஒரே மேடையில் விவாதிக்க தயாரா ? என்று பிற அரசியல் கட்சித் தலைவர்களை அழைத்தார்.
ஆனால் இதுவரை யாரும் விவாதத்திற்கு வரவில்லை என்றும், அதற்கு அன்புமணியிடம் விவாதம் நடத்தும் அளவுக்கு தமிழகத்தில் யாருக்கும் துணிச்சல் இல்லை என்றும் ராமதாஸ் தெரிவித்தார். தற்போது 7 நாட்களில், 7 தலைப்புகளில், 7 நகரங்களில் அன்புமணி பேசி வருகிறார் என்றும், கையில் ஒரு துண்டு பேப்பர் கூட இல்லாமல் சரளமாக பேசக்கூடி திறமையானவர் அன்புமணி என்றும் அவர் பாராட்டினார். மேலும் பாமக ஆட்சிக்கு வந்தால், தேவையில்லாத இலவசங்களை கொடுக்க மாட்டோம் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.