Designed by Iniyas LTD
நான்காண்டுகள் சிறை தண்டனையும் 100 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேரும் குற்றவாளிகள் என பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
1991 முதல் 1996 வரை முதலமைச்சராக பதவி வகித்தபோது, ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996-ம் ஆண்டு சுப்ரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது தொடங்கி சுமார் 18 ஆண்டுகள் வரை இந்த வழக்கு சென்னை மற்றும் பெங்களூருவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் நடைபெற்றது.
தண்டனை
சொத்து குவிப்பு வழக்கு குற்றவாளி ஜெயலலிதாவிற்கு நான்காண்டு சிறை தண்டனையும் 100 கோடி ரூபா அபராதமும் மற்றைய குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்காண்டு சிறைத்தண்டனையும் 10 கோடி ரூபா அபராதமும் விதித்துள்ளது