தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நான்கு போட்டிகளில் விளையாட இந்தியா வந்துள்ள ஆஸி அணி!

201702132053165032_Australian-team-arrives-for-four-Test-series_SECVPFஇந்தியா – வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முடிவடைந்தது. அடுத்து இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி வருகிற 23-ந்தேதி புனேயில் தொடங்குகிறது.

இதற்காக ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி இன்று இந்தியா வந்துள்ளது. துபாயில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த அந்த அணி துபாயில் இருந்து மும்பை வந்தடைந்தது. பின்னர் அவர்கள் தெற்கு மும்பையில் உள்ள ஓட்டலுக்குச் சென்றனர். இந்திய ‘ஏ’ அணிக்கெதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. அதுவரை மும்பையில் தங்கியிருக்கும் ஆஸ்திரேலிய அணி பின்னர் முதல் போட்டி நடைபெறும் புனேயிற்குச் செல்லும். பயிற்சி ஆட்டம் 15-ந்தேதி தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் விவரம்:-

1. பிப்ரவரி 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை: இந்தியா ‘ஏ’ – ஆஸ்திரேலியா – மும்பை
2. பிப்ரவரி 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை: முதல் டெஸ்ட் – புனே
3. மார்ச் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை: 2-வது டெஸ்ட் – பெங்களூரு
4. மார்ச் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை: 3-வது டெஸ்ட் – ராஞ்சி
5. மார்ச் 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை: 4-வது டெஸ்ட் – தரம்சலா

Comments
Loading...