தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நான் தமிழச்சி என்பதால்!

14046138_10209630132086691_7092456370637708055_n

எனது தேசத்தின் நான் கம்யூனிஸ்ட்
என்பதற்காக யாரும் கொலைசெய்ய
வரவில்லை
எனது நகரில் நான் நாத்திகவாதி
என்பதற்காக
எனது கருத்துக்கள் ஒதுக்கப்படவில்லை
எனது ஊரில் மதவாதிகளை
நான் மதிப்பதற்காக
சாதிகளை ஆதரிப்போர் என்னை
வெறுக்கவும் இல்லை
தமிழினத்தை சேர்ந்தவள்
என்பதற்காக என்னை அழிக்க நினைக்கிறார்கள்
மேலும்
எனது தாய்மொழியில்
சில கவிதைகள் எழுதி இருக்கிறேன்
என்பதற்காக
புறக்கணிக்கிறார்கள்.

-தேன்மொழி தாஸ்

Comments
Loading...