தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாமலின் கார் பந்தையம் ரத்து

மஹிந்த அரசாங்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட துறைமுக நகரத் திட்டத்தில் நாமல் ராஜபக்ஷவுக்காக அமைக்க திட்டமிடப்பட்டிருந்த கார் ஓட்டப்பந்தய ஓடுபாதை திட்டத்தை நல்லாட்சி அரசாங்கத்தினால் நீக்கப்படவுள்ளது.namal

சீன முதலீட்டுடனான துறைமுக நகரத் திட்டமானது, அதிலுள்ள தேவையற்ற அம்சங்கள் நீக்கப்பட்டு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அரச தொழில் முயற்சி மற்றும் சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை சீனாவுக்கு இலவசமாக காணி ஒதுக்குவது தொடர்பிலான நடவடிக்கையும் நீக்கப்படும் என தெரிவித்துள்ளார். நாமலின் கார் ஓட்டப்பந்தய ஓடுபாதை திட்டம் போன்று குறித்த திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அவ்வாறான தேவையற்ற அம்சங்கள் நீக்கப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து புதிய முதலீடுகள் குறித்து தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் மாதத்தில் சீனா இங்கு பாரிய முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், அதனை கொண்டு ஹம்பாந்தோட்டை மற்றும் மத்தல அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...