Designed by Iniyas LTD
Comments
Trending
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் முன்னெடுத்துள்ள விசாரணையொன்றின் தகவல்களுக்கு அமைவாக பொரலஸ்கமுவ, குளம் வீதியில் உள்ள குறித்த இணைப்புச் செயலாளரின் வீட்டை நேற்று முன் தினம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சுற்றிவளைத்ததாகவும் அதன்போதே குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் தலைமையக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
தங்கம் கைப்பற்றப்பட்டதையடுத்து அவ்வீட்டின் உரிமையாளரான குறித்த இணைப்புச் செயலாளரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்சமயம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்கார, அதன் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் பிரேமசாந்த ஆகியோரின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Recover your password.
A password will be e-mailed to you.