தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்றைய தினம் கொழும்பு புறக்கோட்டை நீதவான் லங்கா டி ஜயரத்னவினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச, கிறிஸ் நிறுவனம் ரக்பி விளையாட்டுக்காக வழங்கிய நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டிற்காக கடந்த 11 ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலை பாதுகாவலர்களால் இன்று காலை அழைத்துவரப்பட்டு கொழும்பு புறக்கோட்டை நீதவான் நீதிமன்றில் முனிலைப்படுத்தப்பட்டார்.
இதற்கமைய அவர் மீதான 70 மில்லியன் ரூபா மோசடி தொடர்பிலான குற்றச்சாட்டு குறித்த வழக்கை விசாரித்த புறக்கோட்டை நீதவான் லங்கா டி சில்வா, அவரை 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரரப் பிணையில் செல்ல உத்தரவிட்டார்.
 
அதேவேளை வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்த நீதவான், அடுத்த விசாரணையை ஓகஸ்ட் எட்டாம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் கொழும்பு கோட்டை டிரான்ஸ்வேல்ட் சதுக்கத்திற்கு அருகில் 4.3 ஏக்கர் காணியை 99 வருட குத்தகைக்கு எடுத்து தற்போது அடுக்குமாடி குடியிருப்பொன்றையும், நட்சத்திர விடுதியொன்றையும் நிர்மாணித்து வருகின்றது.
இந்த காணியை குறித்த நிறுவனத்திற்கு பெற்றுக்கொடுத்ததாகக் கூறப்படும் நாமல் ராஜபக்சவின் வேண்டுகொளுக்கு இணங்க கிறிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் குப்தா என்பவர் ரக்பி விளையாட்டின் முன்னேற்றத்திற்காக வழங்கிய 70 மில்லியன் ரூபா நிதி மாயமான சம்பவத்திற்காகவே நாமல் பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

Comments
Loading...