தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாயாறு பகுதியில் மழை மற்றும் புயலினால் மூன்று வீடுகள் 8 வாடிகள் சேதம்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாயாறு கொக்குத்தொடுவாய் கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் 09.05. 2019 அன்று மாலை நான்கு முப்பது மணி அளவில் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது

இதன்போது வீசிய கடும் காற்று காரணமாக கொக்குத்தொடுவாய் கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளில் மூன்று வீடுகளும் நாயாறு பகுதியில் அமைந்திருக்கின்ற மீனவர்களுடைய வாடிகள் எட்டும்  அந்த பகுதியில் அமைந்திருக்கும்  கிறிஸ்தவ தேவாலயமும் பலத்த சேதங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக நேற்றைய தினம் (10)முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உடைய அதிகாரிகள் நேரில் சென்று நிலைமைகளை அவதானித்துள்ள்னர்.

Comments
Loading...