Designed by Iniyas LTD
நார்வே செஸ் போட்டியின் ஆறாவது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி!
நார்வேயில் நடைபெற்று வரும் செஸ் போட்டியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், பிரான்ஸின் மேக்ஸிம் வாச்சியர் லாக்ரேவை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோற்கடித்தார்.
இதனால், ஆறாவது சுற்று முடிவின் அடிப்படையில் ஆனந்த் 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இதன்மூலம், இந்தப் போட்டியில் அவரது நிலை முன்னேற்றமடைந்து வருகிறது. இந்நிலையில், 6ஆவது சுற்றின் முடிவில், பர்கேரியாவின் வெஸ்லின் தோபாலோவ், ரஷியாவின் அலெக்ஸாண்டர் கிரிஸ்ஷுக்கை தோற்கடித்து 5.5 புள்ளிகளுடன் முதல் இடத்திலேயே நிலைக்கிறார்.
மேலும் ஆறாவது சுற்றில் இதர போட்டியாளர்களின் ஆட்டங்கள் அனைத்தும் டிராவில் முடிவடைந்தன. அதில், ஹாலந்தின் அனிஷ் கிரி – ஆர்மேனியாவின் லிவோன் ஆரோனியன், நார்வேயின் ஜான்லுட்விக் ஹாம்மர் – இத்தாலியின் ஃபாபியானோ காருவானா, உலக சாம்பியன் மக்னஸ் கார்ல்சென் – அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா அகியோர் மோதிய ஆட்டங்களும் அடங்கும்.