தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாற்காலிகளை நகர்த்த வேண்டுமா? அப்ப கை தட்டுங்க!

அலுவலகங்களில் எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்க கூட நேரமில்லாமல் வேலை செய்பவர்களுக்காகவே இந்த புதிய ரோபோ நாற்காலிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

வேலை செய்து முடித்துவிட்டு நாற்காலிகளை எடுத்து வைக்க தேவையில்லை, கைத்தட்டினாலே போதும் நாற்காலிகள் அவை இருக்க வேண்டிய இடத்திற்கு தானே நகர்ந்து சென்றுவிடும்.   இந்த செல்ஃப் பார்க்கிங் நாற்காலியை நிசான் நிறுவனம் ‘இண்டெலிஜண்ட் பார்க் அச்சிஸ்ட்’ என்கின்ற தொழில்நுட்பத்தால் உத்வேகப்படுத்தப்பட்டு பேர்ட்மேன் கிரியேட்டிவ்வுடன் இணைந்து உருவாக்கியுள்ளது.

இந்த நாற்காலிகள் wireless தொழில்நுட்பம் மற்றும் உள்ளமைக்கப்பட்ட ரோலர்களின் உதவியோடு அதன் இடத்திற்கு தானாகவே செல்கிறது. அறையில் உள்ள கேமரா நாற்காலியின் இடத்தை கண்டறிந்து அது எவ்வளவு தூரம் நகர வேண்டும் என்பதற்கு உதவுகிறது.  நாற்காலிகள் எவ்வளவு கலைந்திருந்தாலும் கைத்தட்டினால் அதன் இடத்திற்கு தானாகவே செல்லும். ஆனால், நிசான் நிறுவனம் இந்த இண்டெலிஜண்ட் பார்கிங் நாற்காலிகள் விற்பனைக்கு இல்லை என்ற செய்தியையும் வெளியிட்டுள்ளது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=O1D07dTILH0″ width=”560″ height=”315″]

Comments
Loading...