Designed by Iniyas LTD
நாளைக்குள் நடவடிக்கை எடுக்காவிடின் கவர்னர் மீது வழக்கு!
தமிழகத்தில் ஆளும் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் தரப்பில் எம்எல்ஏக்கள் பலரும் சசிகலாவை முதல்வராக பொறுபேற்க வேண்டும் என்ற கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதனை தொடர்ந்து சசிகலா முதல்வர் பதவியை ஏற்க வேண்டும் என ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் கருத்து தெரிவித்தனர்.

தொடர்புடைய பதிவு
இந்நிலையில் பன்னீர்செல்வத்திற்கு ஆதராக சில எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்து பா.ஜ.க எம்பி சும்பரமணியன் சுவாமி நேற்று தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது ட்விட்டரில் கருத்து பதிவு செய்துள்ளார். இதில் ‘‘தமிழக சூழல் குறித்து நாளைக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 32ன் படி ஆளுநர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.