தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நிக்கோபர் தீவுகளில் நிலநடுக்கம் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

நிக்கோபர் தீவுகளில் 6ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்குக் கிழக்கே சுமார் ஆயிரத்து இருநூறு கிலோமீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாவில் அந்தமான் நிக்கோபர் தீவுகள் அமைந்துள்ளன.

இதன் நாற்புறமும் கடலால் சூழப்பட்ட  குறித்த   தீவுகள் நிலநடுக்கம், ஆழிப்பேரலை ஆகியவற்றின் தாக்கத்தலுக்கு உள்ளாகும்.

இந்நிலையில் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை 8:23மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மோகியன் என்னுமிடத்தில் இருந்து 133கிலோமீட்டர் தென்கிழக்கே நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்ததாகவும், புவிக்கடியில் 99கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்கப் புவி அறிவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6ஆகப் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...