தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நினைவேந்தல் நிகழ்ச்சியை தடுக்க சென்னை மெரினாவில் போலிஸ் பாதுகாப்பு

இலங்கையில் போரின் போது உயிரிழந்த தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில்   நடத்த இருப்பதாக  தகவல் ஒன்று வெளிவந்திருந்தது.

இந்த நிகழ்விற்கு 13 இயக்கங்கள்  நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவித்திருந்த நிலையில் மெரினா மற்றும் சேப்பாக்கம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போராட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்துவதற்கு ஐகோர்ட்டு தடை விதித்திருந்தது.
இந்த  நிலையில் தடை  உத்தரவை மீறி மெரினாவில் நிகழ்வுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்க போலீஸ்  பாதுகாப்பு அதிகரித்துள்ளது.
தடையை மீறி நினைவேந்தல் நிகழ்ச்சி என்ற பெயரில் மெரினாவில் ஒன்று கூடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க  உள்ளதாக  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மெரினா பகுதியில் பல்வேறு அமைப்பினர் நுழையாமல் இருக்க போலீஸ் ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments
Loading...