Designed by Iniyas LTD
நியாயகடை ஊழியர்கள் 15 திகதி முதல் வேலை நிறுத்தம்
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் முத்துப்பாண்டியன் நிருபருக்கு பேட்டியளித்தார். 
அப்போது அவர் கூறியதாவது:- தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள், நியாயவிலை கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்துக்காக ஓய்வூதிய கமிட்டி அமைக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த கோரிக்கைகளை முன்வைத்து வருகிற 15-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருக்கிறோம்.
இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்து 534 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரியும் 25 ஆயிரம் ஊழியர்களும், நியாயவிலை கடைகளில் பணிபுரியும் 20 ஆயிரம் ஊழியர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.அதுமட்டுமில்லாமல், மேற்சொன்ன ஊழியர்கள், பணி ஓய்வு பெற்ற 15 ஆயிரம் பேருடன் இணைந்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்த இருக்கிறோம். தொடர்ந்து, அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில், அடுத்தக்கட்டமாக சங்க நிர்வாகிகள் கூடி ஆலோசித்து, அடுத்தக்கட்ட போராட்டத்தையும் கையில் எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.