தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெலிங்டன் விமான நிலையத்தியிலிருந்த இாட்சத கழுகு உருவ கட்டமைப்பு விழுந்தது – பூமி­ய­திர்ச்சி( படங்கள் இணைப்பு )

4444444நியூ­ஸி­லாந்தின் வட­தீவுப் பிராந்­தி­யத்தை 6.3 ரிச்டர் அள­வான பூமி­ய­திர்ச்சி திங்­கட்­கி­ழமை தாக்­கி­யுள்­ளது. இந்த பூமி­ய­திர்ச்­சியால் கட்­ட­டங்கள் நடுங்­கி­யதால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

மக்கள் வீடு­க­ளையும் கட்­ட­டங்­க­ளையும் விட்டு அல­றி­ய­டித்­துக்­கொண்டு வெளி­யேறி திறந்த வெளி­க­ளிலும் வீதியிலும் தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர்.

மாஸ்­டரொன் நகரின் வடக்கே 38 கிலோ­மீற்றர் தூரத்தில் சுமார் 27 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த பூமி­ய­திர்ச்சி தாக்­கி­யுள்­ளது.

மேற்­படி பூமி­ய­திர்ச்­சியால் வெலிங்டன் விமான நிலையத்தியிலிருந்த இாட்சத கழுகு உருவ கட்டமைப்பு கூரையிலிருந்து சரிந்து தரையில் விழுந்­துள்­ளது.

ஆனால், அதனால் எவ­ருக்கும் காயம் எதுவும் ஏற்­ப­ட­வில்லை.

இந்த பூமியதிர்ச்சியையடுத்து பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.

Comments
Loading...