தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நியூசிலாந்தில் டெப்பி புயலால் கடும் வெள்ளம் மக்கள் வெளியேற்றம்!

ஆஸ்திரேலியாவில் ருத்ர தாண்டவம் ஆடிய டெப்பி புயல், நியூசிலாந்தையும் பதம் பார்த்துள்ளது. இவ்விரு நாடுகளிலும், இந்தப் புயல் காரணமாக 500 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

நியூசிலாந்தின் தெற்கு தீவும், வடக்கு தீவும் இந்தப் புயல், மழையால் வெள்ளக்காடாகி உள்ளன.

நியூசிலாந்தின் வடக்கு தீவு நகரமான எட்கேகும்பே நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. வீதிகளில் 6½ அடி ஆழத்தில் வெள்ளம் பாய்ந்தோடியது. அங்கு வெள்ளத்தில் சிக்கித் தவித்த நகர மக்கள் அனைவரும் படகுகள் மூலம் கூண்டோடு மீட்கப்பட்டனர். அந்த நகருக்குள் மக்கள் மீண்டும் வந்து விடாத வகையில் போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்துள்ளனர்.

வைக்கட்டோ ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது. இந்த வெள்ளம் ஒருவரை அடித்துச்சென்று விட்டது.

பிளண்டி விரிகுடா பகுதியில் கடந்த 36 மணி நேரத்தில் 250 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. அங்கு வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Comments
Loading...