தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நியூசிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மழை காரணமாக ரத்து

நியூசிலாந்து- இலங்கை அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நெல்சனில் இன்று தொடங்கியது. மழை குறுக்கிட்டதால் 24 ஓவராக ஆட்டம் குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடியது.nz_sl

அந்த அணி 9 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் குவித்தது.  அப்போது மழை மீண்டும குறுக்கிட்டது. லேசாக தூறிய மழை பின்னர் வேகமாக பெய்தது. இதனால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக நடுவர் அறிவித்தார்.  ஆகவே ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து 2-1 என முன்னிலையில் உள்ளது. கடைசி போட்டி 5-ந்தேதி நடக்கிறது. இதில் நியூசிலாந்து வெற்றிபெற்றால் தொடரை 3-1 எனக்கைப்பற்றும். மாறாக இலங்கை வெற்றிபெற்றால் தொடரை 2-2 என சமநிலை செய்யும்.  இரண்டு அணிக்கும் இந்த போட்டி மிக மிக்கியத்துவம் வாய்ந்ததால் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Loading...