Designed by Iniyas LTD
நியூசிலாந்து கிரிகெட் அணித்தலைவரின் இறுதிப்போட்டி இன்று!
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவரும் அதிரடி ஆட்டக்காரருமான பிரண்டன் மெக்கல்லம் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் தனது கடைசிப் போட்டியை விளையாடுகிறார். அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் இன்று கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெறுகிறது. ஏற்கனவே முதலாவது டெஸ்ட்டில் தோல்வியடைந்த நியூஸிலாந்து அணி, இரண்டாவது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்குடன் நாளை களமிறங்கும்.
தொடரை சமன் செய்வதை விட, அணித்தலைவர் மெக்கலமின் இறுதிப் போட்டியை வெற்றி பெற்று, அந்த வெற்றியை அவருக்கு வழங்கி, சிறந்த முறையில் அணித்தலைவரை வழியனுப்ப வேண்டும் என்று நியூசிலாந்தின் வீரர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில், மெக்கலமின் கடைசி டெஸ்ட் போட்டி அனைவரும் எதிர்பார்த்திருக்கும் ஒரு போட்டியாக உள்ளது. இவர் ஒரு சதத்தை பெற்று பெறுமையுடன் வெளியேற வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.
34 வயதான மெக்கலம் இதுவரை 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் மொத்தமாக 6283 ஓட்டங்களை எடுத்துள்ளார். அதில் 11 சதமும், 31 அரை சதமும் அடங்குகின்றது. அவர் டெஸ்ட் போட்டிகளில் பெற்ற அதிகபட்ச ஒட்டமாக 302 ஓட்டங்கள் இருக்கின்றன. அதேபோன்று 260 ஒரு நாள் போட்டியில் விளையாடியுள்ள அவர் 6083 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதம் மற்றும் 32 அரை சதங்களும் அடங்குகின்றன.