தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நிர்வாகிகள், தொண்டர்களை குதறும் விஜயகாந்த்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சி தோல்வியடைந்ததற்கு நீங்கள் தான் காரணம் என கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் விஜயகாந்த் கோபமாக கூறியுள்ளார்.viya

கட்சியை முன்னேற்றுவது குறித்து கட்சியின் மாவட்ட செயலர்கள் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் விஜயகாந்த் பேசி வருகிறார். இந்த கூட்டத்தின் போது விஜயகாந்த் மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவரிடம் கேள்விகளை அடுக்கியுள்ளார், தோல்வி மன நிலையிலேயே நீங்கள் களத்தில் இருந்து பணியாற்றியது ஏன்? கட்சி தலைமை ஒரு முடிவெடுத்தால், அதை ஏற்க மறுப்பது போல நடப்பது சரியா? தேர்தலில் பணம் நிறைய விளையாடி உள்ளபோது, பணம் படைத்த நம் கட்சி வேட்பாளர்களும், பணத்தை செலவிட தயங்கியது ஏன்? சில இடங்களில் கட்சி வேட்பாளர்கள் தி.மு.க – அ.தி.மு.க வேட்பாளர்களிடம் விலை போனது ஏன்? பணத்துக்கு விலை போனதன் விளைவாகவே பல இடங்களிலும் நம் வேட்பாளர்களால், ‘டிபாசிட்’ கூட பெற முடியாமல் போயுள்ளது.

இப்போதும் அ.தி.மு.க – தி.மு.க இரண்டு தரப்பிலும் ஆட்களை இழுக்க, பலமான முயற்சி நடக்கிறது. அதற்கு நம்ம ஆட்களும் உதவி புரிகின்றனர். அவர்கள் பற்றி அத்தனை விவரங்களும் என்னிடம் உள்ளன. கட்சிக்குள் நடைபெறும் உள்குத்தை எப்படி அனுமதிப்பது? என்று கோபப்பட்டுள்ளார்.

Comments
Loading...