Designed by Iniyas LTD
நிறைவுக்கு வந்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் போராட்டம்.
முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் முன்னெடுத்த போராட்டம் முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரன் அவர்கள் வழங்கிய உறுதிமொழிக்கமைய சற்றுமுன்னர் நிறைவுக்கு வந்தது
மாலை 4 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன் போராட்டம் நடத்திய பேருந்து உரிமையாளர்கள் சாரதிகள் நடத்துனர்களை சந்தித்த முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரன் அவர்கள் உங்களது பிரச்சனைகளை விளங்கி கொண்டுள்ளோம் எமக்கு உடனடியாக தீர்வு தர முடியாது எனவே எமக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கி பொதுமக்களின் நலன்கருதி சேவைகளை முன்னெடுக்குமாறும் இரண்டு வாரத்துக்குள் உங்களது பிரச்சனைக்கு தீர்வு வழங்குவதாகவும் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது
இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் குறித்த உருதிமொளிக்கமைய போராட்டம் நிறுத்தப்பட்டதாகவும் தமது சேவைகள் நாளை வழமை போன்று இடம்பெறும் என்றும் தமது போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்
தொடர்ந்து இரண்டு வாரங்களுள் தீர்வு இல்லையேல் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்
இதேவேளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெடிகொளுத்தி ஆரவாரத்தில் ஈடுபட்டதோடு போராட்டத்தை கைவிட்டு சென்றனர்