Designed by Iniyas LTD
நிலம் கையக அவசரச் சட்டத்தை மீண்டும் பிரகடனம் செய்யும் எண்ணமில்லை: பிரதமர் மோடி
நிலம் கையக அவசரச் சட்டத்தை மீண்டும் பிரகடனம் செய்யும் எண்ணமில்லை என்று பிரதமர் மோடி வானொலி உரையில் தெரிவித்தார்.
பான் கி பாத் நிகழ்ச்சி மூலம் மாதம் ஒரு முறை வானொலியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். இன்று வானொலியில் அவர் உரையாற்றியதாவது: பான் கி பாத் மூலம் உங்களிடம் மீண்டும் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஜன்தன் யோஜனா திட்டம் மூலம் மக்களுக்கு புதிய வங்கி கணக்கு துவக்கி கொடுத்ததன் மூலம் ரூ.22 ஆயிரம் கோடி டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 11 கோடி பேர் பயன் பெற்றுள்ளனர் இந்த திட்டம் தொடங்கி ஓராண்டு ஆகிவிட்டது. நாம் இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளோம். இந்த வெற்றிக்கு காரணமான குழுவிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் குஜராத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. காந்தி, பட்டேல் பிறந்த மண்ணில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் தேசத்தை கவலை அடைய செய்துள்ளது. இது போன்று நடக்க கூடாது. இட ஒதுக்கீடு என்பது விஷயமல்ல. வளர்ச்சி பெற்றுள்ளோமா என்பதையே பார்க்க வேண்டும். குஜராத் அரசு போதிய நடவடிக்கையும் எடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. குஜராத்தில் அமைதி திரும்பியுள்ளது.
நிலம் கையகப்படுத்தும் மசோதா குறித்து விவசாயிகளிடம் வதந்திகள் பரப்பப்படுகின்றன. விவசாயிகளை பயமுறுத்தவோ, யாரும் குழப்பம் ஏற்படுத்துவதையோ அனுமதிக்க மாட்டோம். நிலம் கையப்படுத்தும் விவகாரத்தில் விவசாயிகள் நலன் கருதி புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.