Designed by Iniyas LTD
நீண்ட நாட்களாக பூட்டிவைக்கபட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளை அலுவலகம்..
மன்னாரில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கிளை அலுவலகம் தொடர்ச்சியாக பூட்டிவைக்கபட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதனால் பல்வேறு தேவைகளுக்காக அங்கு செல்லும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் தேசியக்கூட்டடைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் மாவட்டக் காரியாலயம் ஒன்று மன்னார் உப்புக்குளம் புதுத்தெரு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
எனினும் குறித்த அலுவலகம் திறக்கப்பட்டு சில நாட்கள் அங்கு மக்கள் சந்திப்பு இடம் பெற்று வந்துள்ளது.
அதன்பின் தற்போது நீண்ட காலமாக குறித்த அலுவலகம் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுவதோடு,அலுவலக பணியாளர்களோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரே அலுவலகத்திற்கு வருவதில்லைவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
