தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நீதிக்கான தமிழ்ச் சிற்றூர்த்தி நாளை ஜெனீவா திடலை சென்றடையும்

சிற்றூரத்தி (2) சிற்றூரத்தி (1)

ஈழத்தமிழர்களின் இன அழிப்புக்கு நீதி தேடி ஐநா நோக்கிய தமிழ்ச் சிற்றூர்த்தி  மாபெரும் பேரணியில் இணைந்து ஐநா திடலை சென்றடைந்துள்ளது . தமிழ்ச் சிற்றூர்த்தி கடந்த இரு நாட்களாக அனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு Basel மற்றும் Zürich நகரங்களில் கண்காட்சி அமைத்து ஈழத்தமிழர்களின் இன அழிப்பை எடுத்துரைத்து கவனயீர்ப்பு செய்தது .

 Zürich நகரத்தில் நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்ட நிகழ்வில் நீதிக்கான தமிழ்ச் சிற்றூர்த்தி பயணத்தை மேற்கொள்ளும் மனிதநேயபணியாளர்கள் கலந்துகொண்டு தமிழ் இளையோர்களை பேரணியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்ததோடு , அவர்களை தேசத்துக்காக தொடர்ந்து பணியாற்ற முன்வருமாறு அழைப்பு விடுத்தனர் .

சிங்களம் தமீழீழ மண்ணில் சனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்து, எங்கள் தமிழீழ மக்களை இரத்தக் கண்ணீர் சிந்த வைத்துள்ளது. விபரிப்பதற்கு இது நேரமுமல்ல, நீங்கள் ரணங்களை மறந்த பிறவியுமல்ல. எங்கள் மண்ணின் வலி துடைக்க, உலகிற்கு எம் நிலையை எடுத்துரைக்க இதுவன்றி வேறொரு கணம் அமையாது.

Comments
Loading...