Designed by Iniyas LTD
நீதிபதிகளை அவதூராக எழுதும் இணையத்தளங்கள் மீது கடும் நடவடிக்கை!
நீதிபதிகள் தொடர்பில் பொய்ப்பிரசாரங்களை மேற்கொள்ளும் இணையத்தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென சட்டத்தரணிகள் சங்கத்தைத் தெளிவுபடுத்தியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நீதிபதிகள் தொடர்பிலும் மிகவும் தகாத முறையில் அவர்களது கௌரவத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சில இணையத்தளங்கள் செயற்பட்டு வருகின்றன.
தொடர்புடைய பதிவு
அண்மையில் திலின கமகேவுக்கு பிணை வழங்கிய நீதிபதி தொடர்பில் தகாத முறையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதில் அவர் மலேசியாவிற்கு சென்றிருந்ததாகவும் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அவர் ஒரு முறையேனும் மலேஷியாவுக்குச் சென்றிருக்கவில்லை என்பதே உண்மையாகும். நீதிபதிகளை அச்சுறுத்தி தமக்கு சாதகமாக தீர்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முனையும் ஒரு சாரார் செயற்படுவதால் நாம் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கத்தை தெளிவுபடுத்தினோம்.
இவற்றைப் பெற்றுக்கொண்டு நாம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.