தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பில் சிறு தவறை கண்டு பிடித்துள்ளனர் அதிமுக

ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பில் சிறு தவறு ஒன்றை அதிமுகவினர் கண்டுபிடித்துள்ளனர். நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில், 665ஆம் பக்கத்தில் தங்க நகைகள் 20548 கிராம் என்றும் ஒரு கிராமின் மதிப்பு ரூபாய் 433 என்றும் குன்ஹகா மதிப்பீடு செய்துள்ளார்.admk-logo

அப்படி என்றால் 20548X433=88,97,284 இது உண்மை கணக்கு. ஆனால் குன்ஹகாவோ 20548X 433=8,90,55,032 என்று கணக்கு போட்டுள்ளார். இப்படி அவசரகதியில் தீரப்பை வழங்கியே ஆகவேண்டும் என பல தவறுகள் இந்த நீதிபதியின் தீர்ப்பில் இடம்பெற்றுளன.

எனவே மேல்முறையீடு செய்யும் போது இந்த தீர்ப்புக்கு தடை உத்தரவு வாங்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்பது தான் அதிமுகவினரின் கருத்து. உண்மையில் என்ன நடந்துள்ளது?

நீதிபதி குன்ஹா தமது தீர்ப்பில் 647-ம் பக்கத்தில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ4334 என்று பதிவு செய்து கணக்கிட்டுள்ளார்.

ஆனால் 665ஆம் பக்கத்தில் 20548X433=8,90,55,032 என்று இடம்பெற்றுள்ளது. இதனால் குன்ஹா ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ433 என்று மதிப்பிட்டு தவறான கணக்கைப் போட்டுவிட்டார் என்கிறார்கள்.

அதே நேரத்தில் ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ4334 என்ற அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால் குன்ஹா குறிப்பிடும் ரூ 8 கோடியே 90 லட்சத்து 55 ஆயிரத்து 32தான் வருகிறது.

அதனால் 665 ஆம் பக்கத்தில் இடம்பெற்றிருக்க வேண்டியது 20548X4334=8,90,55,032. தீர்ப்பை டைப்பிங் செய்யும் போது “4” என்பது மிஸ்ஸிங் ஆகிவிட்டது என்பதுதான் உண்மை.

Comments
Loading...