தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நீதிமன்ற தாக்குதலில் கைதான மாணவர்களை விடுவிப்பதில் குழப்பங்கள்

யாழ்ப்பாண நீதிமன்ற தாக்குதல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முதலமைச்சர் ஆகியோர் பாடுபட்டுவருகின்ற போதும் மற்றொரு குழு குழப்பங்களை செய்துவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.jaffna

கைது செய்யப்பட்டுள்ள 37 மாணவர்கள் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் குறித்த முழுமையான விபரங்கள் இன்று உரிய தரப்பினருக்கு வழங்கப்படும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் அவர்களை விடுவிக்க முயற்சிக்கப்படுகிறது.ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் சென்றிருந்த சமயம், குறித்த மாணவர்களை விடுவிப்பது தொடர்பாக வடமாகாண முதலமைச்சரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு பெயர்பட்டியல் கையளிக்கப்பட்டுமிருந்தது.

எனினும் கூட்டமைப்பின் மற்றொரு முக்கியஸ்தரும் சட்டத்தரணியுமான சிறீகாந்தாவோ நீதித்துறை மீது நம்பிக்கையற்றவர்களிற்காக நீதிமன்றினில் வாதிடப்போவதில்லையென அறிவித்துள்ளார். இதனால் வவுனியாவிலிருந்து சட்டத்தரணிகளை அழைப்பதற்கு முயற்சிகள் தொடர்கின்ற போதும் அதனையும் யாழ்.மேல்நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கமூடாக சிறீகாந்தா தடுப்பதாக கூறப்படுகின்றது.

Comments
Loading...