Designed by Iniyas LTD
நீதியை நிலைநாட்ட 36வது நாளாக ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணம்!
29.01.2014 அன்று நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆரம்பமான ஐ.நா. நோக்கி நீதிக்கான நடைப்பயணமானது 05.03.2014 இன்று 36வது நாளாக Vers-chez-Perrin நகரத்தை கடந்து செல்கின்றது .
இன்று நடைப்பயணத்தை மேற்கொள்ளும் மனிதநேயபணியாளர்கள் சுவிஸ் மக்களுடனான சந்திப்பில் ஈடுபட்டனர். சர்வதேசம் மீண்டும் எம்மை கைவிட்டாலும் எமது பலத்தில் நாம் விடுதலை பெறுவோம் என்ற உறுதியோடு நாம் தொடர்ந்து போராடவேண்டும் என்ற கருத்தை இச் சந்திப்பில் தெரிவித்தனர் .
நாளைக் காலை தமிழீழ தாகத்துடன் நீதிக்கான நடைப்பயணம் ஐநா நோக்கி செல்ல இருக்கின்றது – எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறும் மாபெரும் மக்கள் பேரணி வரலாற்றுப் பதிவாக மாற்றிட உலகத்தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் .


