தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!

30-baby6-600மட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப்பிரிவிலுள்ள கொம்மாதுறை பிரதேசத்தில், ஒன்றரை வயது நிரம்பிய குழந்தையொன்று நீர்ப் பாத்திரத்திற்குள் குப்புற விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
கொம்மாதுறை உமா மில் வீதியைச் சேர்ந்த சுரேஸ்காந்தன் ஜனார்த்தனன் என்ற குழந்தையே, இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, பின்னர் நகர்ந்து வந்து தண்ணீர்ப் பாத்திரத்திற்குள் தவறி விழுந்துள்ளது. குழந்தையை உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தபோதும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Comments
Loading...