Designed by Iniyas LTD
நுவரெலியா காட்டிலிருந்து ஆண் சடலமாக மீட்பு?
நுவரெலியா-கண்டி பிரதான வீதியில் வெஸ்டடோ எனுமிடத்தில் உள்ள காட்டுப்பகுதியிலிருந்து, கண்டி-தெல்தெனியைவைச் சேர்ந்த 21 வயதான ஏ.எம். சத்துரங்க டில்ஷான் அபயகோன் என்பவரின் சடலத்தை, இன்று மீட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். இவர், இராணுவத்தில் கடமையாற்றுபவர் என்று தெரிவித்த பொலிஸார், சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகள், நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.