தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நெடுந்தீவில் இந்திய மீனவர் நால்வர் கைது…

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்   நான்கு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தை சேர்ந்த குறித்த  மீனவர்கள் படகொன்றில் இன்று (07) அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்களை காங்கேசன்துறை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன், அவர்களின் படகினையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை வடமாகாண நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Loading...