தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நெடுந்தீவு சன சமூக நிலையத்தை கடற்படை விடுவிக்க வேண்டி மனு!

jaffnanothநெடுந்தீவுப் பகுதியில் 15 ஆண்டுகளிற்கும் மேலாக கடற்படையினர் வசமுள்ள சன சமூக நிலையத்தினையும் 25ற்கும் மேற்பட்ட வீடுகளையும் விடுவிக்க வேண்டும் என மக்களால் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஜனாதிபதியின் கவனத்திற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

நெடுந்தீவுப் பகுதியில் உள்ள சன சமூக நிலையமானது கடந்த 15 ஆண்டுகளாக கடற்படையினரின் பிடியில் உள்ளது. அத்துடன் இப் பெரிய தீவினில் உள்ள ஒரேயொரு சன சமூக நிலையம் இதுவாகும்.

இதேபோன்று நெடுந்தீவு இறங்கு துறைக்கு அண்மையில் உள்ள 25ற்கும் மேற்பட்ட வீடுகளையும் பயன் மிகு காணிகளையும் கடற்படையினர் அபகரித்து வைத்துள்ளனர்.

இதனால் இதன் உரிமையாளர்கள் இன்றும் நெடுந்தீவிலும் யாழ் நகரிலும் உறவினர் வீடுகளிலும் வாடகை வீடுகளிலுமே வாழ்வதனால் இவற்றை கடற்படையினர் விடுவிக்கவேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இது தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதேச சபையின் பிரதிநிதி.

சன சமூக நிலையத்தின் புத்தகங்கள் ஓர் அறையில் 9 அலுமாரிகளில் வைத்து பூட்டிய நிலையில் பாவனை இன்றி கிடக்கின்றது. அதே போன்று அண்மையில் ஓர் மாகாண சபை உறுப்பினரும் தனது ஒதுக்கீட்டில் 50 ஆயிரம் ரூபா நிதி ஒதுக்கியிருந்தார்.

இந்த நிலையில் இச் சன சமூக நிலையத்தினை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வட மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது இருப்பினும் பயன் கிட்டவில்லை. இதேபோல் காங்கேசன்துறை கடற்படை அதிகாரியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டும் பயன் இல்லை என சுட்டிக்காட்டியது.

இதனையடுத்து குறித்த விடயத்தினை ஜனாதிபதியின் கவனத்திற்கு பிரதேச செயலாளர் கடிதம் அனுப்புமாறு தீர்மானிக்கப்பட்டது.

Comments
Loading...