Designed by Iniyas LTD
நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று!
நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த வழக்கு தொடர்பான தீர்ப்பு, இன்று வெள்ளிக்கிழமை (07) வழங்கப்படவுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் திகதி நெடுந்தீவு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த ஜேசுதாஸ் லக்சாயினி எனும் 12 வயது சிறுமி வீட்டில் இருந்து நெடுந்தீவு சந்தைக்கு மீன் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றார்.
இதன்போது, அச்சிறுமி கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர், கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டார். குறித்த கொலை சம்பவம் தொடர்பில் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி ஜெகதீஸ்வரன் என்பவர், நெடுந்தீவு பொலிஸாரால் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு விசாரணை யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் வழக்கு தொடர்பான சாட்சி பதிவுகள் யாழ்.மேல் நீதிமன்றில் வியாழக்கிழமை (06) இடம்பெற்றது.
இதன்போது, இவ்வழக்கு தொடர்பான இறுதித்தீர்ப்பு நாளை (இன்று) வெள்ளிக்கிழமை (07) வழங்கப்படும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்திருந்தார்..