Designed by Iniyas LTD
நெடுவாசல் நோக்கி மாபெரும் வாகனப்பேரணி!
வரும் ஞாயிறு -மார்ச்-05ம் தேதி திருச்சியின் மத்திய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் பெரியார் சிலையிலிருந்து, நெடுவாசல் நோக்கி இரு சக்கர பயணம். காலை 9 மணிக்கு துவங்குகிறது. வாய்ப்பிருக்கும் தோழர்கள் நெடுவாசல் நோக்கிய பயணத்தில் இணைந்து கொள்ளுங்கள்.
இந்த இருசக்கரப் பயணத்தில் இணைந்து கொள்ள விரும்பும் தோழர்கள் 9884072010 என்கிற எண்ணுக்கு செய்தி அனுப்புங்கள்.
போராட்டத்தினை தொடர்வோம். சீரழிக்கும் எந்த திட்டமும் தமிழகத்திற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே வேண்டாம் என்போம்.
குறைந்தபட்சம் காவேரி தண்ணீரை தராத இந்திய அரசிற்கு தமிழகத்தின் மூலவளத்தில் எள் முனையளவும் நாம் தரப்போவதில்லை என உறுதி பூணுவோம்.
இத்தனை ஆண்டுகாலம் தமிழகத்தின் பெட்ரோலியம், நிலக்கரி, இரும்பு போன்ற தாதுக்களை திருடிய இந்திய அரசை, கார்ப்பரேட் கம்பெனிகளை தடுத்து நிறுத்துவோம்.