Designed by Iniyas LTD
நெல்சிப் திட்ட நிதி மோசடி தொடர்பில் வழக்கு!
வட மாகாணத்தில் நெல்சிப் திட்டத்தில் இடம்பெற்ற பணிகளின்போது இடம்பெற்றமோசடிகள் தொடர்பில் திங்கட்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக வட மாகாண பிரதம செயலாளர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் அவர் மேலும் தெரியவருகையில் ,
வட மாகாணத்தில் உள்ளூராட்சி சபைகள் ஊடாகவும் ஏனைய திட்டங்களின் ஊடாகவுப் நெல்சிப் திட்டங்களில் பல் வேறு விதமான மோசடிகள் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டது. இதன் பிரகாரம் வடக்கில் இடம்பெற்ற நெல்சிப் திட்டங்கள் அனைத்தும் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இவ்வாறு மீளாய்வு மேற்கொண்ட வேளையில் மோசடி இடம்பெற்றதாக முறையிடப்பட்ட திட்டங்கள் மட்டுமன்றி அனைத்து திட்டங்களுமே மீளாய்விற்கு உட்படுத்தப்பட்டது.
அதன் பிரகாரம் சுற்று நிரூபங்களிற்கு அமைய நடைமுறைகளை பின்பற்றாது இடம்பெற்ற திட்டங்கள் , கேள்வி கோரல்களில் தவறு இளைத்த திட்டங்கள் , நிதிக் கோடுக்கல் வாங்கள்களில் தவறு இளைத்த திட்டங்கள் என்பவற்றுடன் மோசடி இடம்பெற்ற திட்டங்கள் என பல வகையில் இனம் காணப்பட்டன.
இவ்வாறு இனம்காணப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்திய , மற்றும் கண்கானிப்பிணை மேற்கொண்ட சகல அரச அதிகாரிகளிடமும் சட்ட பூர்வமாக முதலில் விளக்கம் கோரப்பட்டது.
அவ்வாறு கோரப்பட்ட விளக்கத்திற்கு குறித்த உத்தியோகத்தர்களினால் அளிக்கப்பட்ட பதிலினை ஓர் சட்ட உத்தியோகத்தர் மூலம் பரிசீலித்தோம்.
இதன் அடிப்படையில் இச் செயல்பாடுகளிற்கு பொறுப்பாக இருந்தவர்கள் மற்றும் நிதிக் கொடுப்பணவுகளிற்கு பொறுப்பானவர்கள்மீதே குறித்த குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
அதன்பிரகாரம் தற்போது அவ் உத்தியோகத்தர்களிற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கையினை எடுக்கத் தீர்மானித்துள்ளோம். அவ்வாறு நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ள உத்தியோகத்தர்களிற்கு எதிராக வரும் திங்கட் கிழமை வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.