Designed by Iniyas LTD
நைஜீரியாவின் வடகிக்குப் பகுதியில் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் தாக்குதல்
நைஜீரியாவின் வடகிக்குப் பகுதியில் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் குறைந்தது இருபது பேர்களைக் கொன்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்னோ மாகாணத்தில் தொடர்ச்சியாக அந்தத் தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
அங்குள்ள க்வாஜாஃபா எனும் கிராமத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டதாக, உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார்.
அங்கு சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அல்லது உயிருடன் எரிக்கப்பட்டவர்களின் சடலங்களைத் தான் கண்டதாகவும் அந்த உள்ளூர்வாசி கூறுகிறார்.
இதேவேளை கேமரூன் நாட்டுடனான எல்லைப் பகுதிக்கு அருகிலுள்ள இரண்டு கிராமங்களில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அண்மையக் காலங்களில் நைஜீரியா, கேமரூன், சாட் மற்றும் நிஜேர் ஆகிய நாடுகள் கூட்டாக முன்னெடுத்துவரும் இராணுவ நடவடிக்கைகளில் போக்கோ ஹராமுக்கு பல தோல்விகள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.