Designed by Iniyas LTD
பகத்சிங் உட்பட மூவருக்கும் மோடி அஞ்சலி!
இந்திய நாட்டின் விடுதலை வேள்வியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த 3 இளைஞர்கள் பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு. லாகூர் குண்டுவெடிப்பு சதி வழக்கில் அவர்கள் 3 பேருக்கும் ஆங்கிலேய அரசு மரண தண்டனை விதித்தது. அவர்கள் மூவரும் 1931-ம் ஆண்டு, மார்ச் மாதம் 23-ந் தேதி லாகூர் சிறையில் தூக்கில் போடப்பட்டனர்.
அவர்களின் உயிர்த்தியாகத்தை நினைவுகூரும் விதத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகிய 3 பேரும் உயர்த்தியாகம் செய்த இந்த நாளில், நான் அவர்களுக்கு தலை வணங்குகிறேன். தலைமுறைகளுக்கெல்லாம் ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ள அவர்களின் வெல்ல முடியாத வீரத்துக்கும், தேசப்பற்றுக்கும் வணக்கம் செலுத்துகிறேன்” என கூறி உள்ளார்.
சோசலிச தலைவர் ராம் மனோகர் லோகியின் பிறந்த நாளையும் பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.