தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பங்­க­ளாதேஷிடம் பலி தீர்த்த பாகிஸ்தான் அணி!

Pakistan-vs-Bangladesh-Live-STreamingகொல்­கத்தா ஈடன் கார்டன் மைதா­னத்தில் நேற்று நடை­பெற்ற பாகிஸ் தான் மற்றும் பங்­க­ளாதேஷ் அணி­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டியில், ஆசியக் கிண்­ணத்தில் பங்­க­ளா­தே­ஷிடம் அடைந்த தோல்­விக்கு பழி தீர்த்­துக்­கொண்­டது பாகிஸ்தான்.

நேற்­றைய போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்­ட­க்கா­ரர்­க­ளாக கள­மி­றங்­கிய அக­மது ஷேசாத்தும், ஷார்ஜில் கானும் அணிக்கு சிறப்­பான தொடக்­கத்தை கொடுத்­தார்கள். அக­மது ஷேசாத் அதி­ர­டி­யாக ஆடி 52 ஓட்­டங்­களை எடுத்து ஆட்­ட­மி­ழந்தார்.

3ஆவ­தாக கள­மி­றங்­கிய முக­மது ஹபீஸ் 64 ஓட்­டங்­களை விளாசினார். அடுத்­துவந்த அணித் தலைவர் அப்­ரிடி நீண்ட நாட்­க­ளுக்கு பிறகு தனது இயல்­பான அதி­ரடி ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தினார். அவர் 19 பந்­து­களை சந்­தித்து 4 சிக்­ஸர்கள், 4 பவுண்­ட­ரி­க­ளுடன் 49 ஓட்­டங்­களை பெற்று ஆட்­ட­மி­ழந்தார். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 201 ஓட்­டங்­களை பெற்­றது.

202 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி கள­மி­றங்­கிய பங்­க­ளாதேஷ், பாகிஸ்தான் அணியின் ஆக்­ரோ­ஷ­மான பந்து வீச்சை சமா­ளிக்க முடி­யாமல் 20 ஓவர்­களில் 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 146 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றது. இதனால் 55 ஓட்­டங்­களால் பங்­க­ளாதேஷ் அணி தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது.

அந்த அணி சார்பாக ரஹ்மான்(25), ஷகிப் ஹல் ஹசன் ஆட்டமிழக்காமல் (50), தமீம் இக்பால்(24) ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

Comments
Loading...