Designed by Iniyas LTD
பசுபிக் நாடான வனுவாட்டுவை புயல் தாக்கி பேரழிவு
பசுபிக் நாடான வனுவாட்டுவையில் புயல் தாக்கி பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், டஜன் கணக்கான மக்கள் பலியாகியுள்ளதாகவும் உதவி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அந்த சமூகத்தினரின் பாராம்பரிய ஓலை வீடுகள் அனைத்தும் புயற்காற்றில் வீசி எறியப்பட்டுள்ளதுடன், நவீன அடுக்கு மாடித் தொகுதிகளும் உடைந்து வீழ்ந்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். வனுவாட்டுக்குச் சொந்தமான அறுபத்தைந்து தீவுக் கூட்டங்களிலும் புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து இன்னமும் முழுமையாக கணக்கெடுக்கப்படவில்லை என நிவாரணப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் தேவாலயங்களில் தற்காலிகமாக தஞ்சம் அடைந்துள்ளதாக கூறிய நிவாரணப் பணியாளர்கள் மேலும் அனேகமானோர் தலைநகர் போட் விலாவின் தெருக்களில் அலைந்து திரிவதாகவும் தெரிவித்தார்கள். இதுவரை எட்டுப்பேர் பலியாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.