தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

படகுகள் இன்றி திரும்பிச் செல்ல மறுக்கும் தமிழக மீனவர்கள்

படகுகள் இன்றி திரும்பிச் செல்ல இந்திய மீனவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்ட 86 இந்திய மீனவர்களின் அரைவாசி பேர், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது படகுகள் இன்றி நாடு திரும்ப மறுப்பு வெளியிட்டுள்ளனர். fishermen-boat

யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 43 பேரே படகுகள் இன்றி நாடு திரும்ப மறுத்துள்ளனர். இந்திய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் தமது படகுகள் சகிதம் விடுவிக்கப்பட்டுள்ளமையை இந்திய மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை வரும் தமிழக குழு

இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட படகுகளை மீட்க மீனவ குழு இன்று இலங்கை வரவுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவ படகுகளை பெறுவதற்காகவே இலங்கை வரவுள்ளார்கள்.

ராமேஸ்வர கடலோர பிரதேசங்களைச் சேர்ந்த பல கிராமங்களில் வாழும் 135 மீனவர்கள் இலங்கை சென்று 87 மீன்பிடி படகுகளை கையேற்கவுள்ளதாக இந்திய மீன்பிடி திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை மற்றும் நாகபட்டனம் ஆகிய பிரதேசங்களில் இருந்து 20 படகுகளில் இலங்கை செல்லவுள்ளதாக திணைக்களத்தின் உதவி இயக்குனர் எம். கோபிநாத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்ட படகுகள் இலங்கையில் பல இடங்களில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில், இலங்கை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரிலேயே இந்திய படகுகள் விடுவிக்கப்படுவதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது.

Comments
Loading...