Designed by Iniyas LTD
படகு மூலம் தமிழகம் வந்த ஈழத் தம்பதி கைது!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உசிலம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான அகதிகள் வசித்து வருகின்றனர்.
நேற்று நள்ளிரவு இந்த முகாமிற்கு ஒரு ஜோடியினர் வந்தனர். அவர்கள் கணவன்-மனைவி எனவும், இலங்கையில் இருந்து வந்த தாகவும் கூறினர். இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அந்த ஜோடியின் பெயர் தர்ம குமார் (வயது38), நிரோஷா (33) என்பதும் தெரியவந்தது.
இலங்கை மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த இவர்களுக்கு, கடந்த 6 மாதங் களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. அங்கு ராணுவத்தின் தொல்லை அதிகமாக இருப்பதால் படகு மூலம் இந்தியா வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இலங்கையில் இருந்து ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தில் தாங்கள் இறக்கி விடப்பட்டதாகவும் அங்கிருந்து பஸ் மூலம் திருமங்கலம் அகதிகள் முகாமிற்கு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் அவர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் படகு மூலம் இந்தியா வந்ததால், ஆஸ்டின்பட்டி போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.