Designed by Iniyas LTD
பணம் கொடுத்து இழுக்கும் முயற்சியில் தினகரன் அணி!
எதிர்ப்பு அதிகமாகி உள்ளதால், பன்னீர்செல்வம் அணியின் பூத்ஏஜன்டுகளை, விலை கொடுத்து இழுக்கும் முயற்சியில், தினகரன் தரப்பு ஈடுபட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில், தினகரனுக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை; மாறாக, பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், முற்றுகையிடுவதும் தொடர்கிறது. அதனால், அவரை வெற்றி பெறவைக்க, ஆதரவாளர்கள் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ‘தங்களுக்கு சாதகமாக செயல்பட்டால், 1.5 லட்சம் ரூபாய் தருகிறோம்’ என, பன்னீர் அணியில் உள்ள, பூத் ஏஜன்டுகளிடம், தினகரன் அணியினர் பேரம் பேசி வருகின்றனர். இதற்காக, அமைச்சர் ஒருவர் தலைமை யில், ஐந்து பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பணத்திற்கு அடி பணியாதோரிடம், அரசு வேலை, அரசு வீடு தருவதாகவும், ஆசை காட்டப்படுகிறது. அதற்கும் சம்மதிக்காவிட்டால், மிரட்டல் விடுக்கின்றனர். அதனால், தினகரன் ஆதரவாளர்களைப் பார்த்தாலே, பன்னீர் செல்வம் அணியின் பூத் ஏஜன்ட்கள் ஓட்டம் பிடிக்கின்றனர்.