Designed by Iniyas LTD
பணியாளர்கள் படுத்துறங்கும் நட்டாங்கண்டல் அரசினர் வைத்தியசாலை
வன்னியின் நட்டாங்கண்டல் அரசினர் வைத்தியசாலையில் ஜனாதிபதியின் வடக்கின் வசந்தமோ, அமைச்சர்களின் வாக்குறுதிகளோ, எதுவுமே இன்னும் கிடைக்காமல் தான் இருக்கின்றது. நோயாளர்கள் தங்கிப் படுக்க, படுக்கைகள் இருக்கின்ற போதும் அங்கு வைத்தியர் இல்லாமையால் பணியாளர்கள் படுத்துறங்கவே அது பயன்படுகின்றது. 17 கிராமங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்து ஐநூறு குடும்பங்களிற்கென இந்த வைத்தியசாலை மட்டுமே இருக்கின்றது.

வாரத்தின் மூன்று நாட்களே வைத்தியர் வந்து செல்கிறார். ஏனைய நாட்களில் நோய் வந்தாலோ, பாம்பு கடித்தாலோ பரிதாபகரம் தான். வழமை போலவே எவரும் எட்டிப்பார்த்திராத வைத்திய சாலையின், பாடசாலை அபிவிருத்தி சங்கம் விடுத்த வேண்டுகோளையடுத்து கனடாவை சேர்ந்த புலம்பெயர் உறவுகளது அமைப்பான கனடாவின் அன்புக்கரங்கள் தமிழர் இணையம் மருந்துகளை பேணிப்பாதுகாக்க குளிர்சாதனப்பெட்டியொன்றை வழங்கியுள்ளது.
வலி.வடக்கு பிரதேச சபையின் பிரதி தவிசாளரும் உதவும் அமைப்பின் இணைப்பாளருமான ச.சஜீவன் வைத்தியசாலை அபிவிருத்தி சங்கப் பிரதிநிதிகளிடம் அதனை அண்மையில் உத்தியோகபூர்வமாக கையளித்திருந்தார்.