தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பந்துவீச்சாளராகும் டோனி

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டி20போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக டோனி தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வே பயணமாகியுள்ளது.doni

இந்த தொடரில் சீனியர் வீரர்கள் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா,ஷிகர் தவான், அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணித்தலைவர் டோனி டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அடுத்து இந்திய அணி நீண்ட காலம் டெஸ்ட் தொடரில் விளையாடவிருப்பதால் டோனி இந்த தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்தார்.

இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில், அணித்தலைவர் டோனி இந்திய வீரர்களுடன் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த தொடரில் பந்துவீச அவர் பந்துவீச்சு பயிற்சியும் எடுத்து வருகிறார்.

Comments
Loading...