தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் ஈரான் நாடு முக்கிய பங்கு வகிக்கின்றது

உலகில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் ஈரான் நாடு முக்கிய பங்குவகித்து வருவதாக அமெரிக்க உள்விவகாரத்துறையின் வருடாந்தர ஆய்வு முடிவுகள் குற்றம்சாட்டியுள்ளன. கடந்த 2015ம் ஆண்டில் உலகெங்கும் நடைபெற்றுள்ள பயங்கரவாத தாக்குதல்கள் அனைத்திற்கும் அடிப்படை காரணமாகவும் ஈரான் அமைந்துள்ளதாகவும் அந்த ஆய்வில் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.americca

குறிப்பாக பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவளிப்பது மட்டுமின்றி நிதி, ஆயுதங்கள், பயிற்சி உள்ளிட்டவைகளை உலகெங்கிலும் உள்ள குழுக்களுக்கு ஈரான் அளித்துவருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. லெபானானின் ஹிஸ்புல்லா குழு, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் சிரியா ஜனாதிபதி ஆசாத் உள்ளிட்டவர்களுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் ஈரான் ஆதரவளிப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. அமெரிக்காவின் இந்த ஆய்வறிக்கை வெளியானதும், இதுகுறித்து கருத்து தெரிவித்த ஈரானின் அயதுல்லா அலி காமேனி, இஸ்லாமிய புரட்சி ஏற்பட்ட 1979ல் இருந்தே ஈரான் மீது தொடர்ந்து விரோத போக்கையே அமெரிக்கா கடைபிடித்து வருகிறது. மிக மோசமான பிரித்தானியாவையும், மிகக் கொடிய அமெரிக்காவையும் நம்பியது பாரிய தவறாக தாம் தற்போது உணர்வதாக அயதுல்லா அலி காமேனி தெரிவித்துள்ளார்.

கடந்த 2012ல் இருந்தே உலகெங்கும் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இது 13 விழுக்காடு குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றது. கடந்த ஆண்டு உலகெங்கும் நடந்த 11,774 பயங்கரவாத தாக்குதல்களில் 28,328 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. இது கடந்த 2014 ஆம் ஆண்டு 13,463 தாக்குதல்கள் எனவும் இதனால் 32,727 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தது.

Comments
Loading...