தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்தால் இரு நோயாளிகள் பலி?

201703161910147386_traning-doctors-strike-in-rajiv-gandhi-hospital_SECVPFசென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மேல்மருவத்தூரை சேர்ந்த மாணவர் விஜய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காததால், அவரது உறவினர்கள் பயிற்சியிலிருந்த மருத்துவரைத் தாக்கினர். இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பயிற்சி மருத்துவர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் சிகிச்சை கிடைக்காமல் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டிருந்த நோயாளிகள் அவதிக்குள்ளாயினர். மேலும், சிகிச்சையிலிருந்த இருவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது. மருத்துவர்களின் சாலை மறியலால் சென்ட்ரல் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நோயாளிகள் யாரும் உயிரிழக்கவில்லை என மருத்துவமனை டீன் நாராயணசாமி விளக்கமளித்துள்ளார். பயிற்சி மருத்துவர்களுடன் தான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் அனைவரும் பணிக்குத் திரும்புவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...