Designed by Iniyas LTD
பரணி மனைவியை கதற வைத்த பிக் பாஸ் நிகழ்ச்சி – பதற வைக்கும் தகவல்கள்.!
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்றவர்களின் டார்ச்சரும் கடுமையான வார்த்தைகளாலும் நொந்து சுவர் ஏறி குதித்து தப்பிக்க முயற்சி செய்தார், இதனால் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
வெளியே வந்த அவர் தற்போது மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக உள்ளார், இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பரணியால் பெண்களுக்கு ஆபத்து என சிலர் கூறியதை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, என் புருஷனால பெண்களுக்கு ஆபத்து என கூறியதை என்னால் தாங்கி கொள்ளவே முடியவில்லை, அவரை பற்றி அவங்களுக்கு என்ன தெரியும்? அவர் நல்ல குணம் உடையவர், உதவும் மனப்பான்மை உடையவர்.
அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பட்ட துயரங்களை பார்த்து எங்கள் குடும்பமே கண்ணீர் வடித்தது, என் பிள்ளைகள் அப்பாவை ஏன் மா இப்படி செய்றாங்க என கேட்கும் போது பதில் சொல்ல தெரியாமல் தவித்திருக்கேன் என கண்ணீருடன் கூறியுள்ளார்.
மேலும் எடிட் செய்து காட்டும் இந்த 1 மணி நேரத்திலேயே இவ்வளவு வேதனைகளை அனுபவத்திருக்கிறார், இன்னும் திரையில் காட்டாத போதெல்லாம் எவ்வளவு கஷ்டபட்டு இருப்பார் என கண் கலங்க பேசியுள்ளார்.