Designed by Iniyas LTD
பரிஸில் எரிவாயு கசிவால் பாரிய வெடி விபத்து!
பிரான்ஸின் தலைநகர் பரிஸில் இன்று மாலை பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. எராளமாக எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக பரிஸ் நகரம் புகைமண்டலத்தால் சூழ்ந்துள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 12.30 மணியளவில் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. பெரிஸ் நகரத்துக்கு செல்லும் எரிவாயு குழாயில் ஏற்பட்ட கசிவே இந்த வெடிப்புக்கு ஆரம்ப காரணம் என தெரிவிக்கப்படுகின்றது