Designed by Iniyas LTD
பருத்தித்துறை, தண்ணபந்தலடி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை..
பருத்தித்துறை, தண்ணபந்தலடி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (13) இரவு இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை, கற்கோவலம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்த இளைஞன் முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவரை தாக்கியுள்ளதாகவும் அதன் காரணமாகவே குறித்த இளைஞன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது