தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பருத்தித்துறை பிரதேச செயலக பாடசாலைகள் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு சரவணபவன் எம்.பியால் பொருட்கள் கையளிப்பு

பருத்தித்துறை பிரதேசசெயலகத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கு கற்றல் உபகரணங்களையும் விளையாட்டு உபகரணங்களையும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் நேற்று வியாழக்கிழமை 2014-01-09  தினம் வழங்கி வைத்தார்.சரவணபவன் எம்பி

2013ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிதியில் இருந்து யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு   புத்தகங்களும், விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைத்தார்.

அதன்படி பருத்தித்துறை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதன்போது நெல்லியடி மத்திய மகா வித்தியாலையம், உடுப்பிட்டி அமெரிக்கன்மிசன் பாடசாலை, வடமராட்சி மத்திய மகளீர் கல்லூரி ஆகியவற்றிற்கு தலா 20 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டன.

மேலும் துன்னாலை வல்லியானந்தா விளையாட்டு கழகம், புலோலி உதய சூரியன் விளையாட்டு கழகம், புலோலி நாவலர் விளையாட்டு கழகம்,வல்வெட்டித்துறை நெற்குழு கழுகுகள் விளையாட்டு கழகம், கூவில் தீவயோதி சனசமகு நிலையம் ஆகியவற்றிற்கு தலா 30 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பருத்தித்துறை பிரதேச செயலர் த. ஜெயசீலன், வடமராட்சி கல்விப் பணிப்பாளர் பி. நந்தகுமார், பருத்தித்துறை நகர சபைத் தலைவர் சபா. இரவீந்திரன் , பருத்தித்துறை பிரதேச சபைத் தலைவர் பூ. சஞ்சிவன் ,பருத்தித்துறை நகர சபை உப தலைவர் எஸ் பத்மநாதன் ,நகரசபை உறுப்பினர்கள் பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் விளையாட்டுக் கழக தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Comments
Loading...